/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் கழிவுநீர் தேக்கம்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை ரோட்டில் கழிவுநீர் தேக்கம்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ரோட்டில் கழிவுநீர் தேக்கம்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ரோட்டில் கழிவுநீர் தேக்கம்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ரோட்டில் கழிவுநீர் தேக்கம்; ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 09, 2025 10:02 PM
பொள்ளாச்சி; பிரதான ரோட்டில் கழிவுநீர் தேக்கமடைவதை தடுக்கக் கோரி, மாக்கினாம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, அதிகப்படியான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பிரதான ரோட்டில் தேக்கமடைவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டுநர்களும் பாதிப்படைகின்றனர்.
பல நாட்களாக இப்பிரச்னை நிலவுவதால், நிரந்தர தீர்வு காணக் கோரி, அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பிரச்னை குறித்து மக்கள் கூறிதாவது: மாக்கினாம்பட்டி பிரதான ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். கார், டூவீலர் உள்ளிட்டவை வேகமாக செல்லும் போது, கழிவுநீர் தெறிக்கிறது. சில நேரங்களில் டூ வீலரில் செல்வோர், விபத்துக்கு உள்ளாகின்றனர்.
சுகாதார சீர்கேடால் கொசுத் தொல்லையும் அதிகரித்து குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கின்றனர். கழிவுநீரை வெளியேற்றி, சீராக வடிந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.