Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாதாள சாக்கடை குழியில் வெளியேறும் கழிவுநீர்; பிரச்னைக்கு தீர்வு காணாததால் மக்கள் அதிருப்தி

பாதாள சாக்கடை குழியில் வெளியேறும் கழிவுநீர்; பிரச்னைக்கு தீர்வு காணாததால் மக்கள் அதிருப்தி

பாதாள சாக்கடை குழியில் வெளியேறும் கழிவுநீர்; பிரச்னைக்கு தீர்வு காணாததால் மக்கள் அதிருப்தி

பாதாள சாக்கடை குழியில் வெளியேறும் கழிவுநீர்; பிரச்னைக்கு தீர்வு காணாததால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜூன் 26, 2025 09:57 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.

பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டத்தால், மக்கள் படாதபாடு படுகின்றனர். அதில், ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டையே குளம் போல மாற்றி வருகிறது.

ஆங்காங்கே புகார்கள் எழுந்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு அருகே பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து அதிகளவு கழிவுநீர் வெளியேறுகிறது.

ரோட்டில், குட்டை போல தேங்கும் கழிவுநீரால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் வேகமாக செல்லும் போது கழிவுநீர், நடந்து செல்லும் மக்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது தெறிக்கிறது. இதனால், வேலைக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக கட்டடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியேறும், கழிவறை கழிவுநீர், செப்டிக்டேக் கழிவுநீர் முழுவதும் பாதாள சாக்கடை வழியாக செல்கிறது.

ஆனால், பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னை தொடர்கதையாகிறது. இது குறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் முறையீட்டும் நடவடிக்கை இல்லை. இனி யாரிடம் இந்த பிரச்னைக்கு முறையிடுவது என தெரியவில்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். அப்போதாவது இந்த கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா என, தெரியவில்லை.

இவ்வாறு, கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us