/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'யூ டர்ன்' அமைத்து நெரிசலுக்கு தீர்வு ஜமாய்ச்சுட்டீங்க! போலீசாருக்கு தொழில்துறை பாராட்டு!'யூ டர்ன்' அமைத்து நெரிசலுக்கு தீர்வு ஜமாய்ச்சுட்டீங்க! போலீசாருக்கு தொழில்துறை பாராட்டு!
'யூ டர்ன்' அமைத்து நெரிசலுக்கு தீர்வு ஜமாய்ச்சுட்டீங்க! போலீசாருக்கு தொழில்துறை பாராட்டு!
'யூ டர்ன்' அமைத்து நெரிசலுக்கு தீர்வு ஜமாய்ச்சுட்டீங்க! போலீசாருக்கு தொழில்துறை பாராட்டு!
'யூ டர்ன்' அமைத்து நெரிசலுக்கு தீர்வு ஜமாய்ச்சுட்டீங்க! போலீசாருக்கு தொழில்துறை பாராட்டு!
UPDATED : ஜன 28, 2024 02:09 AM
ADDED : ஜன 27, 2024 11:13 PM

கோவை:கோவையில் சிக்னல்களை அகற்றி, 'யூ டர்ன்' அமைத்து, போக்குவரத்து சிக்கலை எளிமையான முறையில் தீர்த்து வைத்த போலீசாருக்கு, சி.ஐ.ஐ., கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சீமா, ராக் உள்ளிட்ட அமைப்பினர், பாராட்டு விழா நடத்தினர்.
கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிக்னல்களை அகற்றி, 'யூ டேர்ன்' அமைக்கப்பட்டன. முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் பழகப் பழக எளிதாக மாறியது 'யூ டேர்ன்' முறை.
சிக்னல்களில் காத்திருக்கும் நேரம், சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ்கள், விரயமாகும் எரிபொருள், வெளியாகும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சிக்னல்களை இயக்க ஒவ்வொரு சிக்னலிலும் போலீசார் என, பல்வேறு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக, 'யூ டேர்ன்' அமைந்தது.
விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதற்கு காரணமான போலீசார், போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் அனைவருக்கும் தொழில் அமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
இவ்விழாவில், கொடிசியா தலைவர் திருஞானம், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் துரைராஜ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பிரசாத், சீமா தலைவர் விக்னேஷ் பங்கேற்றனர்.
கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனராக இருந்த மதிவாணன், நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலுவலர் மனுநீதியுடன் இணைந்து சிக்னல்கள் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள், தீர்வு கண்ட வழிமுறைகளை விளக்கினர்.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''பொதுவாகவே போலீஸ் அதிகாரிகள், எதையும் அப்படியே பின்பற்ற வேண்டும், மாற்றம் செய்யக்கூடாது' என்ற மனப்பான்மையில் தான் செயல்படுவர்.
எதையாவது மாற்றி, அதனால் வரும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற அச்சம் இருக்கும். அந்த அச்ச உணர்வை விட்டு, வரும் விளைவுகளை எதிர் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டுடன், இந்த போக்குவரத்து மாற்றம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.