/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிக அபராதமும், தொடர் சோதனையும் குறைக்கும்ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிக அபராதமும், தொடர் சோதனையும் குறைக்கும்
ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிக அபராதமும், தொடர் சோதனையும் குறைக்கும்
ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிக அபராதமும், தொடர் சோதனையும் குறைக்கும்
ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: அதிக அபராதமும், தொடர் சோதனையும் குறைக்கும்
ADDED : ஜன 03, 2024 12:09 AM
கோவை;மாநகராட்சி பகுதிகளில் நேற்று, 188 கிலோ தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல் செய்யப்பட்டு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிமாநிலங்களில் இருந்து, கோவைக்கு அதிகம் கடத்திவரப்பட்டு வியாபாரிகளுக்கு, 'டோர் டெலிவரி' செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் கடந்தாண்டு ஜன., முதல் டிச., வரை, 14 ஆயிரத்து, 151 கடைகளில் சோதனை நடத்தப்பட்டு, 10 ஆயிரத்து, 957 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.24 லட்சத்து, 57 ஆயிரத்து, 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடுமையான தண்டனைகளுடன், சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே, இதன் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்படி, நேற்று மாநகராட்சி பகுதிகளில் சுகாதார பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம், 621 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், 188.600 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.12 லட்சத்து, 81 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக, மத்திய மண்டலத்தில், 63.05 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.41 ஆயிரத்து, 100 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இங்கு மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி முழுவதும் இதேபோல் சோதனையை தீவிரப்படுத்தினால், அபராதத்துக்கு பயந்தாவது பிளாஸ்டிக் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது.