/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை
இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டி கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2025 09:52 PM
கோவை; ஆசிரியர் பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் என, கண்களை கட்டிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு, இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2013 முதல் தற்போது வரை, ஒரு ஆசிரியர் காலிப் பணியிடத்தையும் நிரப்பாமல், 2013, 2017, 2018, 2022ம் ஆண்டு வரை, தகுதி தேர்வு மட்டும் நான்கு முறை நடத்திவிட்டனர்.
2024ம் ஆண்டு நடந்த நியமன தேர்வை நம்பி, ஏராளமானோர் காத்திருந்தனர். அதிலும் யாருக்கும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 40 முதல் 60 வயதை கடந்த எங்களுக்கு, 2,768 காலி பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது.
காலி பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்களுக்கு அரசு வேலை வேண்டும் என கூறி, இடைநிலை ஆசிரியர்கள் கண்களை கட்டிக்கொண்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.