Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாடத்துறை தேர்வில் மதிப்பெண் நெருக்கடி மாணவர்களின் விருப்பம் புறக்கணிப்பு

பாடத்துறை தேர்வில் மதிப்பெண் நெருக்கடி மாணவர்களின் விருப்பம் புறக்கணிப்பு

பாடத்துறை தேர்வில் மதிப்பெண் நெருக்கடி மாணவர்களின் விருப்பம் புறக்கணிப்பு

பாடத்துறை தேர்வில் மதிப்பெண் நெருக்கடி மாணவர்களின் விருப்பம் புறக்கணிப்பு

ADDED : மே 24, 2025 05:49 AM


Google News
கோவை, : அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடப்பிரிவு வழங்கும் நடைமுறை, மாணவர்களின் எதிர்கால கல்வியை பாதிக்கிறது என பெற்றோரும், ஆசிரியர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பில் 400 முதல் 450 மதிப்பெண்கள் பெற்றால் பயாலஜி, மேதமெட்டிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் வழங்கப்படும் நிலையில், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, விருப்பப்பட்ட பாடங்கள் வழங்கப்படாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வித்துறை, முதல் மூன்று இடங்களை வெளியிட வேண்டாம் என அறிவுறுத்தினாலும், 100 சதவீத தேர்ச்சி அடைய, பள்ளிகள் முயற்சிப்பதன் காரணமாக, ஆசிரியர்கள் மாணவர்களின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், தேர்ச்சி வாய்ப்பு அதிகம் உள்ள பாடங்களை தேர்ந்தெடுத்துத் தருகின்றனர், என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதிப்பெண் மட்டுமே அடிப்படையா?


'குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவர்கள் நீட் எழுத முடியாது, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என, தலைமை ஆசிரியர்களே மாணவர்களை நம்பிக்கையிழக்கச் செய்கிறார்கள். இது அவர்களின் கல்வி ஆர்வத்தை முடக்குகிறது என கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை, திறமைமிக்க மாணவர்களுக்கே தடையாக இருப்பதாகவும், அறிவியல் பாடங்களில் மாணவர் விகிதம் தொடர்ந்து குறைவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

சில தலைமையாசிரியர்கள்

ஆசிரியர்கள் கூறுகையில், '450க்கு மேல் பெற்றால் அறிவியல், கணிதம், 400க்கு மேல் பெற்றால் கணினி அறிவியல், 300க்கு மேல் பெற்றால் காமர்ஸ் என்ற வகைப்படுத்தல் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்றி, தலைமையாசிரியர்களால் அமல்படுத்தப்படுகிறது. நான்காவது குரூப்பில் சேர்வது, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கே என்பது போன்ற தவறான பார்வை பள்ளிகளில் நிலவி வருகிறது.பயாலஜி குரூப்பை நீட் தேர்வுக்கே என மட்டும் பார்க்கக் கூடாது. மாணவர்களின் விருப்பத்தைப் பொறுத்தே, பாடப்பிரிவு வழங்கப்பட வேண்டும்' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us