/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தகிக்கும் வெயில்; தவிக்கும் பயணிகள் பஸ் ஸ்டாப் நிழற்கூரை வேண்டும்தகிக்கும் வெயில்; தவிக்கும் பயணிகள் பஸ் ஸ்டாப் நிழற்கூரை வேண்டும்
தகிக்கும் வெயில்; தவிக்கும் பயணிகள் பஸ் ஸ்டாப் நிழற்கூரை வேண்டும்
தகிக்கும் வெயில்; தவிக்கும் பயணிகள் பஸ் ஸ்டாப் நிழற்கூரை வேண்டும்
தகிக்கும் வெயில்; தவிக்கும் பயணிகள் பஸ் ஸ்டாப் நிழற்கூரை வேண்டும்
ADDED : பிப் 12, 2024 01:00 AM

பேரூர்:வெயில் வாட்டி வதைப்பதால், கிராமப்புற பஸ் ஸ்டாப்களில் நிழற்கூரை அமைக்க, கோரிக்கை விடப்பட்டுள்ளது.
செல்வபுரம் - சிறுவாணி ரோடு விரிவாக்கத்துக்காக, மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. வெட்டிய மரங்களுக்கு இணையாக, மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவில்லை.
அச்சமயங்களில் பஸ் ஸ்டாப் நிழற்கூரைகளும் அகற்றப்பட்டன. தெலுங்குபாளையம் பிரிவு, பேரூர், தீத்திபாளையம் பிரிவு, மாதம்பட்டி, தண்ணீர் பந்தல் என, பல கிராமங்களில் நிழற்கூரை இல்லை.
தற்போது, கோடை காலம் துவங்கி வெயில் வெளுத்து வாங்குகிறது. பஸ்களுக்காக காத்திருக்கும் மாணவர்கள், குழந்தைகளுடன் வரும் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள், நிழற்கூரைகள் அமைக்க வேண்டும்.
கிராம மக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாப்களில் நிழற்கூரைகள் இல்லாததால் மழை, வெயிலில் சிரமப்படுகிறோம். உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஒதுக்கி, நிழற்கூரைகள் அமைக்க வேண்டும்.
அந்தந்த பகுதி தொழில் அதிபர்கள், தன்னார்வலர்களின் பங்களிப்பையும் கோரினால், விரைந்து அமைக்கலாம்' என்றனர்.