Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை பள்ளிகள் திறப்பு; அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே கிடக்கு 

நாளை பள்ளிகள் திறப்பு; அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே கிடக்கு 

நாளை பள்ளிகள் திறப்பு; அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே கிடக்கு 

நாளை பள்ளிகள் திறப்பு; அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே கிடக்கு 

ADDED : ஜூன் 01, 2025 01:29 AM


Google News
கோவை : நடப்பு கல்வியாண்டில் (2025 -26) கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட வேண்டும். ஆனால் இதற்கான ஆணை இன்னும் வெளியாகாததால், தலைமை ஆசிரியர்கள் கைகளை பிசைகின்றனர்.

பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில், மாவட்டத்திலுள்ள, அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மை குழு பரிந்துரையின் அடிப்படையில், தற்காலிக நியமனங்களை தலைமையாசிரியர்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.எட்., மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில், முதுகலை மற்றும் பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து, இது தொடர்பான அதிகாரப்பூர்வ ஆணை இன்னும் வெளியிடப்படவில்லை. பள்ளிகள் தொடங்கிய பின் ஆணை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது 60க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக, இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பெறப்படவில்லை. இருப்பினும், சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக நியமனம் மேற்கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18,000, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும். வயது வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. விரைவில் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிட வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியமாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18,000, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும். வயது வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us