/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்
கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்
கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்
கார்கில் வீரர்களுக்கு பள்ளியில் வீரவணக்கம்
ADDED : ஜூலை 28, 2024 08:57 PM
கோவை:கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், மாணவர்கள் கார்கில் வெற்றி தினத்தைக் கொண்டாடினர்.
கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கார்கில் போர் வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் நடனமாடி, வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
கார்கில் போரின் போது, இந்திய விமானப்படையில் பணியாற்றிய கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் குரூப் கேப்டன் நடராஜ், லடாக் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடந்த, போர்க்கள காட்சிகளை விவரித்தார்.
கீதாஞ்சலி குழுமப் பள்ளிகளின் தலைவர் அழகிரிசுவாமி, கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியின் முதல்வர் கவிதா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.