/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயமுறுத்தும் சென்டம் தேர்ச்சி; மாணவர்களுக்கு கட்டாய 'டிசி' பயமுறுத்தும் சென்டம் தேர்ச்சி; மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'
பயமுறுத்தும் சென்டம் தேர்ச்சி; மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'
பயமுறுத்தும் சென்டம் தேர்ச்சி; மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'
பயமுறுத்தும் சென்டம் தேர்ச்சி; மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'
ADDED : மே 26, 2025 05:32 AM

கோவை: கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிக்கு, கட்டாயப்படுத்தி மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்பட்டுள்ளது.
கற்றலில் குறைபாடுடைய மாணவர்களை, கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து டி.சி., வழங்கி வெளியேற்றக்கூடாது என்று, தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகள் இன்னும் ஒருவாரத்தில் திறக்கவுள்ள நிலையில், கோவையில் ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக 'டிசி' வழங்கப்பட்டுள்ளது.
மாணவியின் பெற்றோரை சமாதானப்படுத்தி, அவர்களின் ஒப்புதலோடு டி.சி., வழங்கப்பட்டதாக சக மாணவியர் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட பள்ளியின் பெயரை குறிப்பிட்டு, அந்த பள்ளியில் மாணவியை சேர்க்க, பெற்றோரிடம் சிபாரிசும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, பல பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தலைமையாசிரியர்கள் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க நேரிடுகிறது.
இதற்கு முன் தனியார் பள்ளிகளில் பின்பற்றப்பட்ட நடைமுறையை, இப்போது அரசு உதவிபெறும் பள்ளிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
'டிசி' வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகையில், 'யாரையும் கட்டாயப்படுத்தி டி.சி. வழங்கவில்லை. பெற்றோரின் கோரிக்கையின் பேரில் மட்டுமே வழங்கப்பட்டது'என தெரிவித்தார்.