/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுமுகையில் சனி பெயர்ச்சி பரிகார பூஜை சிறுமுகையில் சனி பெயர்ச்சி பரிகார பூஜை
சிறுமுகையில் சனி பெயர்ச்சி பரிகார பூஜை
சிறுமுகையில் சனி பெயர்ச்சி பரிகார பூஜை
சிறுமுகையில் சனி பெயர்ச்சி பரிகார பூஜை
ADDED : மார் 25, 2025 12:33 AM
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், வருகிற, 29ம் தேதி இரவு சனிப்பெயர்ச்சி பரிகாரம் நடைபெற உள்ளது.
சிறுமுகை எலகம்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு கிருத்திகையின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சனி பகவான், வருகிற, 29ம் தேதி இரவு, கும்ப ராசியில் இருந்து, மீன ராசிக்கு இடம்பெயர்கிறார். இதை அடுத்து கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் தனி சன்னதியில், சனி பெயர்ச்சி பரிகாரம் நடைபெற உள்ளது. மேஷம், சிம்மம், ரிஷபம், விருச்சிகம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் வாயிலாக பயன்பெற உள்ளன. இதற்காக சனிக்கிழமை இரவு, 11:01 மணியிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5:00 மணி வரை பரிகார ஹோமம் பூஜையும், அலங்கார பூஜையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற உள்ளது. எனவே பரிகார பூஜையில் பக்தர்கள் பங்கேற்கும்படி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.