/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் புகார் ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் புகார்
ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் புகார்
ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் புகார்
ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் புகார்
ADDED : ஜூன் 10, 2025 09:48 PM

பெ.நா.பாளையம்; சோமையம்பாளையம் ஊராட்சி செயலாளர் மீது துாய்மை பணியாளர்கள் சரமாரி புகார் கூறி, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் ஊராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள் உள்ளிட்டோரை தரக்குறைவாகவும், தகாத வார்த்தையால் பேசுவதாக கூறி, 50க்கும் மேற்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'எங்களுடைய ஜாதிப் பெயரை கூறி, ஒருமையில் அழைத்து அவமானப்படுத்துகிறார். ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்'' என்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பி.டி.ஓ., (ஊராட்சி) ராமமூர்த்தி, துாய்மை பணியாளர்கள் அளித்த புகார், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
இது தொடர்பாக ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார்.