/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துருப்பிடித்துள்ள சிக்னல் கம்பம்; டிராபிக் போலீசாருக்கு துன்பம்துருப்பிடித்துள்ள சிக்னல் கம்பம்; டிராபிக் போலீசாருக்கு துன்பம்
துருப்பிடித்துள்ள சிக்னல் கம்பம்; டிராபிக் போலீசாருக்கு துன்பம்
துருப்பிடித்துள்ள சிக்னல் கம்பம்; டிராபிக் போலீசாருக்கு துன்பம்
துருப்பிடித்துள்ள சிக்னல் கம்பம்; டிராபிக் போலீசாருக்கு துன்பம்

22 இடங்களில் சிக்னல்
காலை, மாலை வேளைகளில், 'பீக் ஹவர்ஸ்'களில் சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை சரி செய்ய, மாநகரின் பெரும்பாலான இடங்களில் இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக 'ரவுண்டானா' மற்றும் 'யூ டர்ன்'கள் அமைக்கப்பட்டன. இதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில், இதனால் பாதிப்பும் ஏற்படுகிறது.
துருப் பிடித்து பழுது
செயல்பாட்டில் இருக்கும் சிக்னல்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிக்னல்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. 17 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டதால், அனைத்து சிக்னல் கம்பங்களும் துருப் பிடித்து சரிந்து விழும் நிலையில் உள்ளன.
மாற்றுவதில் சிக்கல்
இந்நிலையில், ஒரு சில இடங்களில் பழைய சிக்னல்களுக்கு பதிலான நவீன சிக்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், எல்.இ.டி., விளக்குகள் சிக்னல் கம்பங்கள் முழுவதும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்கள் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.