Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஓடி விளையாடு பாப்பா! பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ஓடி விளையாடு பாப்பா! பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ஓடி விளையாடு பாப்பா! பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ஓடி விளையாடு பாப்பா! பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ADDED : ஜூன் 05, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்; மாணவர்களின் மன நலன், உடல் நலன் பேண, அரசு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில், 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்துக்கு இரண்டு பாட வேளைகள், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாட வேளையில் விளையாட வைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும், கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை, ஒன்பது வகுப்பு மற்றும், 10ம் வகுப்பு, பிளஸ், 1 வகுப்பு மற்றும் பிளஸ்,2 வகுப்பு மாணவர்களுக்கு தனித்தனியே கூட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ள செய்ய வேண்டும்.

தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் முன்னிலையில் காலை வணக்கம் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்க கூட்டத்தில், மாணவர்களை தவறாமல் கலந்து கொள்ள செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் கூட்டத்தில், 6 முதல், 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு உள்ளிட்டவை இடம்பெறுதல்வேண்டும்.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். மதிய உணவு இடைவெளி முடிந்த பின்பு, 20 நிமிடம், 5ம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக, மாணவர்கள், சிறார் பருவ இதழ், செய்தித்தாள், பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்க செய்ய வேண்டும்.

நன்னெறி வகுப்பு, வாரத்துக்கு ஒரு பாடவேளை என ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு தொடர்புடைய வகுப்பு ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மன நலன் சார்ந்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். வாரத்துக்கு ஒரு பாட வேளை, நூலக செயல்பாடுகளுக்கான நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளையின் போது, பள்ளியில் உள்ள நூலக புத்தகங்களை மாணவர்களுக்கு பிரித்து வழங்கி, அவர்கள் படித்து தெளிந்தவற்றைச் சார்ந்த குறிப்புகளை, பாட குறிப்பேடுகளில் எழுத செய்யலாம்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்துக்கு முன்பு அந்தந்த வகுப்புகளில் பெற்றோர் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us