/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பேரூர் ஆதினத்தில் சிவ வேள்வி பூஜை ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத் பங்கேற்பு பேரூர் ஆதினத்தில் சிவ வேள்வி பூஜை ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத் பங்கேற்பு
பேரூர் ஆதினத்தில் சிவ வேள்வி பூஜை ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத் பங்கேற்பு
பேரூர் ஆதினத்தில் சிவ வேள்வி பூஜை ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத் பங்கேற்பு
பேரூர் ஆதினத்தில் சிவ வேள்வி பூஜை ஆர்.எஸ்.எஸ்.,மோகன் பகவத் பங்கேற்பு
ADDED : ஜூன் 21, 2025 11:48 PM

கோவை:பேரூர் ஆதினம் வளாகத்தில், நாளை (23ம் தேதி) நடக்கும் பாரம்பரிய சிவவேள்வி பூஜையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.
பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது:
பேரூர் ஆதினத்தின் 24ம் குருமகா சந்நிதானம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா, நாளை (23ம் தேதி), பேரூர் ஆதின வளாகத்தில் நடக்கிறது. அன்று காலை, 6:00 முதல் 7:15 மணி வரை தெய்வத்தமிழும், வடமொழியிலும் ஓதி வேள்விகள் நடத்தப்படும்.
வேள்வியின் நிறைவாக நடத்தப்படும், சிவலிங்கத்திற்கான அபிஷேக வழிபாடுகளை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் மேற்கொள்ள உள்ளார். காலை, 11:00 மணி வரை நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்கிறார். பொதுமக்கள் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
சிரவை ஆதினம் பாராட்டு
சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் கூறுகையில், ''முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன்னெடுக்கக் காரணம், முருகன் வழிபாட்டில் மக்கள் அதிக ஈடுபாடும், விழிப்புணர்வும் கொண்டிருப்பதே. இம்மாநாட்டை நடத்தும் பொறுப்பை, ஹிந்து முன்னணி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இதில் பங்கேற்பவர்கள் கந்த சஷ்டி பாட இருக்கிறார்கள். உலகத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், முருகன் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது,'' என்றார்.