/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு
ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு
ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு
ஆர்.எஸ்.புரம் அடுக்குமாடி குடியிருப்பு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க இலக்கு
ADDED : ஜூன் 21, 2025 12:10 AM

கோவை : கோவை, ஆர்.எஸ்.புரத்தில் கட்டப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பை, ஆக., மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கோவை, ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில், தரைத்தளம் மற்றும் எட்டு மாடிகளுடன், ரூ.9 கோடியில், 99 குடியிருப்புகள் கட்டும் பணி, 2020ல் துவக்கப்பட்டது.
நகர ஊரமைப்புத்துறை விதிப்படி, 3 மீட்டர் அகலத்துக்கு பக்கத்திறவிடம் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், 1.5 மீட்டர் அகலமே விடப்பட்டிருந்ததால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, அருகில் உள்ள 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' வளாகத்தின் சுற்றுச்சுவரை இடிக்க ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் செலுத்திய வரிப்பணத்தில் ரூ.30 லட்சம் செலவழித்து கட்டப்பட்ட அச்சுவரை, இடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, குடியிருப்பு வளாகத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி, தரைத்தளம் மற்றும் நான்கு தளங்கள் கட்டுவதற்கு மட்டுமே நகர ஊரமைப்புத்துறை அனுமதி அளித்தது. தற்போது கட்டடத்தின் ஒருபுறத்தில் பூச்சு வேலை, இன்னொரு புறத்தில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. ஆக., மாதத்துக்குள் பணியை முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
54 வீடுகள்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கூறுகையில், 'இக்குடியிருப்பில், 54 வீடுகள் அமையும். ஒவ்வொரு வீடும் தலா, 400 சதுரடி பரப்பு கொண்டது. இப்பகுதியில் ஏற்கனவே வசித்தவர்களுக்கே ஒதுக்கப்படும்.
'பயனாளிகள் பங்களிப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆக., மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதால், கட்டுமான பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
'இட வசதியிருந்தால், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும்' என்றனர்.