Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இணையவழிக்குற்றங்களில் இழந்த ரூ.2 கோடி மீட்டு ஒப்படைப்பு

இணையவழிக்குற்றங்களில் இழந்த ரூ.2 கோடி மீட்டு ஒப்படைப்பு

இணையவழிக்குற்றங்களில் இழந்த ரூ.2 கோடி மீட்டு ஒப்படைப்பு

இணையவழிக்குற்றங்களில் இழந்த ரூ.2 கோடி மீட்டு ஒப்படைப்பு

ADDED : ஜூன் 26, 2025 11:31 PM


Google News
கோவை; இணையவழி குற்றங்கள் வாயிலாக ஒன்பது பேர் இழந்த, ரூ.2 கோடியை மீட்ட கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள சூழலில், அது சார்ந்த சைபர் கிரைம் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. மோசடிகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஒரு மோசடி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால், மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்றத் துவங்குகின்றனர்.கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் மோசடிகள் குறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து, பணத்தை மீட்டு வருகின்றனர். இந்நிலையில், பங்குசந்தை வர்த்தகம், வங்கி பணப்பரிவர்த்தனை, ஓ.டி.பி., உள்ளிட்ட பல்வேறு வகையான மோசடிகளில் பணத்தை இழந்த, ஒன்பது பேரிடம் இருந்து புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், ரூ.2 கோடி அளவிலான தொகையை மீட்டனர்.

இத்தொகையை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us