/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.5 லட்சம் திருட்டு
ADDED : செப் 01, 2025 10:24 PM
அன்னுார்; அன்னுாரில் வீட்டு கதவை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அன்னுார், அழகாபுரி நகரை சேர்ந்தவர் ரத்தினசாமி, 46. பைனான்ஸ் அதிபர். இவர் கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், முக்கால் சவரன் கம்மல், அரைப்பவுன் மோதிரம் ஆகியவை திருட்டுப் போயிருந்தன. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.