Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 4 வழிச்சாலை, கூடுதல் பாலம் அமைக்க ரூ.100 கோடி! மேட்டுப்பாளையத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

4 வழிச்சாலை, கூடுதல் பாலம் அமைக்க ரூ.100 கோடி! மேட்டுப்பாளையத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

4 வழிச்சாலை, கூடுதல் பாலம் அமைக்க ரூ.100 கோடி! மேட்டுப்பாளையத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

4 வழிச்சாலை, கூடுதல் பாலம் அமைக்க ரூ.100 கோடி! மேட்டுப்பாளையத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

ADDED : ஜூன் 10, 2025 09:47 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகர் பகுதியில், உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவும், பவானி ஆற்றில் கூடுதலாக புதிய பாலம் கட்டவும் ரூ.100 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகரில், கோவை - மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி, மேட்டுப்பாளையம் - அன்னுார், சிறுமுகை - அண்ணாஜி ராவ் உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன.

பவானி ஆற்றுப்பாலத்தை கடந்து தான் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல முடியும். ஏராளமானோர் இச்சாலை, பாலம் வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேட்டுப்பாளையம் பகுதிகளில் சாலையை விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறையினர் சர்வே எடுத்தனர்.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்கவும், பவானி ஆற்றுப்பாலத்திற்கு அருகில் புதிதாக ஒரு பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.100 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள சி.டி.சி., டிப்போ முதல் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தீம் பார்க் வரை 10 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஐந்து முக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உள்ள பவானி ஆற்றுப்பாலத்திற்கு அருகே புதியதாக ஒரு பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலம் நான்கு வழிச்சாலைக்கு ஏற்றவாறு அமையும். தற்போது உள்ள பவானி ஆற்றுப்பாலம் நன்றாக தான் உள்ளது.

அதன் தடுப்பு சுவர்கள் தான் சேதம் அடைந்துள்ளன. பழைய பாலம் இடிக்கப்படாது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, 16 முதல் 20 ஆயிரம் கன அடி பில்லுார் அணையில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பாலம் நல்ல நிலையில் உள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பாலங்களின் உறுதி தன்மையை சரி பார்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து வருகின்றன. பவானி ஆற்றுப்பாலத்தையும் ஆய்வு செய்ய உள்ளார்கள்.

நான்கு வழிச்சாலை மற்றும் புதிய பாலம் அமைக்க ரூ.100 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். அரசு ஒப்புதலுக்கு பிறகு பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.----





      Our Apps Available On




      Dinamalar

      Follow us