/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில்சார் விருதுகள் வழங்கி ரோட்டரி கவுரவம் தொழில்சார் விருதுகள் வழங்கி ரோட்டரி கவுரவம்
தொழில்சார் விருதுகள் வழங்கி ரோட்டரி கவுரவம்
தொழில்சார் விருதுகள் வழங்கி ரோட்டரி கவுரவம்
தொழில்சார் விருதுகள் வழங்கி ரோட்டரி கவுரவம்
ADDED : ஜூன் 14, 2025 11:37 PM

கோவை: ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சென்டேனியல் சார்பில், தொழில்சார் சிறப்பு விருது வழங்கும் விழா,அவிநாசி ரோடு, தி கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல் வளாகத்தில் நடந்தது.
இதில், கோவையில் நுாறு வருடங்களுக்கு மேல் மருத்துவம் மற்றும் கல்வி சேவைக்கான விருது கோவை பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது; விருதை மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன் பெற்றுக் கொண்டார். கிராம அபிவிருத்திக்கான சமூக சேவை விருது, அரோமா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் பொன்னுசாமிக்கும் வழங்கப்பட்டது.
தொழில் முனைவோர் சமூக சேவை பிரிவு விருது, கோவை லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முத்துராமனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற வி.எம்.சி., குழுமங்களின் தலைவர் பாஸ்கர் சொக்கலிங்கம், ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் சுந்தரவடிவேலு, சான்பிட்ஸ் நிறுவனத்தின் நிறுவன தலைவர் வரதராஜன் மற்றும் ரமணி அண்ட் அசோசியேட்ஸ் நிறுவன பங்குதாரர் ரமணி சங்கர் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.
விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் லட்சுமணன், ரமேஷ், சாந்தி, கார்த்திகேயன், முருகேசன், ஸ்ரீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.