/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு அறை கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு அறை
கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு அறை
கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு அறை
கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு அறை
ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

கோவை; கோவை மத்திய சிறை கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு சிறை வளாகத்திற்கு முன் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கைதிகளை சந்தித்து பேச, 'ஷிப்ட்' அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படுகிறது.
நாள்தோறும் 260 கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு 'ஷிப்ட்'க்கு அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன் வரும் பார்வையாளர்கள் காத்திருக்க வசதிகள் இல்லாமல் இருந்ததால், அவர்கள் மேம்பாலத்திற்கு கீழ், சாலை ஓரத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது.
இந்நிலையில், பார்வையாளர்கள் காத்திருக்க, மாநகராட்சி சார்பில் காத்திருப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறை வளாக கேட் அருகில் சுமார், 50 பேர் காத்திருக்கும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது.