/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது 'ரோலெக்ஸ்' வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது 'ரோலெக்ஸ்'
வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது 'ரோலெக்ஸ்'
வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது 'ரோலெக்ஸ்'
வனத்துறைக்கு போக்கு காட்டுகிறது 'ரோலெக்ஸ்'
ADDED : செப் 19, 2025 09:28 PM
தொண்டாமுத்துார்; கோவை மற்றும் போளுவாம்பட்டி வனப்பகுதிகளில் சுற்றும் 'ரோலெக்ஸ்' என்ற காட்டு யானையை பிடிக்க, மூன்று கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இரு நாட்களுக்கு முன், மயக்க ஊசி செலுத்தினர். இருப்பினும், வனப்பகுதிக்குள் சென்று விட்டதால், பிடிக்க முடியவில்லை.
தொண்டாமுத்துார் வட்டார விவசாயிகள் கூறியதாவது:
காட்டு யானைகளால் பயிர் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. 'ரோலெக்ஸ்' யானையை பிடிக்கும் பணி துவங்கப்பட்டு, 14 நாட்களாகி விட்டன. வனத்துறையினரின் நடவடிக்கைகள், விவசாயிகளை திருப்திப்படுத்துவதாக இல்லை.
குப்பேபாளையம், அட்டுக்கல், கெம்பனுார் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் 'ரோலெக்ஸ்' புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ஏராளமான வனத்துறையினர் முகாமிட்டிருந்தும், விளைநிலங்களை அந்த யானை சேதப்படுத்துவதை தடுக்க முடியவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.