/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம்; அரசூர், நல்லிகவுண்டம்பாளையம் பள்ளிகள் தேர்வு கோவை அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம்; அரசூர், நல்லிகவுண்டம்பாளையம் பள்ளிகள் தேர்வு
கோவை அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம்; அரசூர், நல்லிகவுண்டம்பாளையம் பள்ளிகள் தேர்வு
கோவை அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம்; அரசூர், நல்லிகவுண்டம்பாளையம் பள்ளிகள் தேர்வு
கோவை அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம்; அரசூர், நல்லிகவுண்டம்பாளையம் பள்ளிகள் தேர்வு
ADDED : ஜூன் 15, 2025 10:23 PM
கோவை; அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ரோபோடிக் ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
2024ம் ஆண்டின் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான, சட்டப்பேரவைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்ததின்படி, மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள, 38 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ரோபோடிக் ஆய்வகம் அமைக்க, ரூ.15.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், கோவை கல்வி மாவட்டத்தில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், டி.நல்லிகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தேர்வாகியுள்ளன.
இதுகுறித்து, திட்ட அலுவலர் கூறுகையில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், மாணவர்கள் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பள்ளிகள் மட்டுமே, இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கில், இந்த ரோபோடிக் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.