ADDED : ஜன 11, 2024 12:27 AM
போத்தனூர் : கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் அருகே அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு சில வாரங்களாக, இதர பயன்பாட்டிற்கான தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. கவுன்சிலர் உஷாவிடம் கூறியும் பலனில்லை. நேற்று காலை இப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிசை மாற்று வாரிய அதிகாரி, மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தண்ணீர் வினியோகம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.