/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,- ஏ அணி முதலிடம் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,- ஏ அணி முதலிடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,- ஏ அணி முதலிடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,- ஏ அணி முதலிடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஆர்.எல்.எம்.எச்.எஸ்.,- ஏ அணி முதலிடம்
ADDED : ஜூன் 26, 2025 02:22 AM
கோவை,:மாவட்ட அளவிலான நான்காவது, 'ஸ்ரீ நவகோடி நினைவு டிராபி' கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், 13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஏழு அணிகள் பங்கேற்றன.
தவிர, 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் ஒன்பது அணிகளும், 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், 17 அணிகள், 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன.
13 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், நடந்த இறுதிப்போட்டியில் அல்வெர்னியா அணி, எஸ்.வி.ஜி.வி., ஒய்.எம்.சி.ஏ., பி.எஸ்.ஜி., சர்வஜனா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன.
மாணவர்கள் பிரிவில், யூத் பிளட், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., பி.எஸ்.ஜி., சர்வஜனா, எஸ்.வி.ஜி.வி., அணிகளும், 16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், பி.எஸ்.ஜி.ஆர்.கே., அல்வெர்னியா, எஸ்.வி.ஜி.வி., பாரதி ஆகிய அணிகளும், முதல் நான்கு இடங்களை பிடித்தன.
மாணவர்கள் பிரிவில், ஆர்.எல்.எம்.எச்.எஸ்.-ஏ, எஸ்.டி.ஏ.டி., பி.எஸ்.ஜி., சர்வஜனா, ஆர்.எஸ்.சி., ரெட்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, ராஜலட்சுமி விளையாட்டுக் கழக நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.