/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காசோலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு சிறைகாசோலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு சிறை
காசோலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு சிறை
காசோலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு சிறை
காசோலை மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு சிறை
ADDED : ஜன 29, 2024 12:32 AM
கோவை:காசோலை மோசடி வழக்கில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை, தொண்டாமுத்துார் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜிக்னேஷ் தேவ்டா.
இவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம், கள்ளாம்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாபு சிதம்பரம், 66, என்பவரும் நண்பர்கள். 2016, நவ., 6ல், பாபு சிதம்பரம் குடும்ப செலவிற்காக, ஜிக்னேஷிடம், 4.5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்த அவர், மீதி தொகை 3.5 லட்சம் ரூபாய்க்கு, காசோலை வழங்கினார்.
ஆனால், பாபு சிதம்பரம் வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்தது. ஜிக்னேஷ், கோவை முதலாவது (காசோலை மோசடி வழக்கு) விரைவு கோர்ட்டில் வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன் வாயிலாக, வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த மாஜிஸ்திரேட் அலெக்ஸ்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட பாபு சிதம்பரத்திற்கு, ஒன்பது மாதம் சிறை, ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.