ADDED : ஜன 12, 2024 11:11 PM
நெகமம்;நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக கொப்பரை ஏலம் நடந்தது.
நெகமம் சுற்று வட்டார பகுதியில் அதிகளவு தென்னை விவசாயம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தேங்காய், கொப்பரை மற்றும் இதர விளை பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய நெகமத்தில் உள்ள ஒழுங்குமுறை கூடத்திற்கு வருகின்றனர்.
தற்போது, விற்பனை கூடத்தில், 'இ - நாம்' திட்டத்தின் வாயிலாக, இரண்டாம் தர கொப்பரை, ஒரு கிலோ, 50 ரூபாய் வீதம், 200 கிலோ ஏலம் விடப்பட்டது.
கொப்பரை விலை சரிந்துள்ளதால், விற்பனை கூடத்தில், 13 விவசாயிகள், ஆயிரத்து நுாறு மூடைகள் (50 கிலோ) தேங்காய் மற்றும் கொப்பரையை இருப்பு வைத்துள்ளனர்.
முதல் தர கொப்பரை விலை உயர்வுக்காக இருப்பு வைத்து காத்திருக்கின்றனர்.