/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 இருக்கணும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 இருக்கணும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 இருக்கணும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 இருக்கணும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 இருக்கணும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2025 11:31 PM
கோவை: அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களிலும், ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகளவில் வைக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சார்பில், ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று, யு.பி.ஐ., 'நெப்ட்', ஆர்.டி.ஜி.எஸ்., உட்பட மின்னணு பரிவர்த்தனைகள் வாயிலாக, பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டு வரும் அளவுக்கு, பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏ.டி.எம்.,களின் தேவை இருந்து கொண்டே இருக்கின்றன.
வங்கிகள் அருகில் இருக்கும் இடங்களில், வங்கி நிர்வாகம் தரப்பிலும், மற்ற பகுதிகளில் வங்கிகளின் ஏ.டி.எம்., இருக்கும் இடங்களில், ஏஜென்சிகள் வாயிலாகவும், ஏ.டி.எம்.,ல் பணம் நிரப்பப்படுகிறது.
ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்கும் போது, அதில், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் குறைந்தளவே இருப்பதாக, அவ்வப்போது புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை, கையாள்வதற்கு வசதியாக, அனைத்து வங்கிகளும், தங்கள் ஏ.டி.எம்.,களில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் செப்., 30ம் தேதிக்குள், அனைத்து ஏ.டி.எம்.,களில் 75 சதவீதம், 2026 மார்ச் 31ம் தேதிக்குள், அனைத்து ஏ.டி.எம்.,களிலும் 90 சதவீதம், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.