/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காவல் உதவி செயலி வாயிலாக 130 பெண்கள் மீட்பு:பதிவிறக்கம் செய்ய போலீசார் அறிவுரைகாவல் உதவி செயலி வாயிலாக 130 பெண்கள் மீட்பு:பதிவிறக்கம் செய்ய போலீசார் அறிவுரை
காவல் உதவி செயலி வாயிலாக 130 பெண்கள் மீட்பு:பதிவிறக்கம் செய்ய போலீசார் அறிவுரை
காவல் உதவி செயலி வாயிலாக 130 பெண்கள் மீட்பு:பதிவிறக்கம் செய்ய போலீசார் அறிவுரை
காவல் உதவி செயலி வாயிலாக 130 பெண்கள் மீட்பு:பதிவிறக்கம் செய்ய போலீசார் அறிவுரை
ADDED : ஜூன் 06, 2024 11:25 PM

பெ.நா.பாளையம்:பெண்களை பாதுகாக்கும் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும்
'காவல் உதவி' செயலி வாயிலாக கடந்த ஒரு ஆண்டில் 130 பெண்கள்
மீட்கப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக தமிழக காவல்துறை 'காவல் உதவி' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,' கூகுள் பிளே ஸ்டோரில் காவல் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலிக்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங் அவசியம் என்பதால், அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
இதில் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பயனாளர்களுக்கு எந்த மொழி பயன்படுத்த வசதியாக இருக்குமோ, அந்த மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் தமிழக காவல்துறை முத்திரையுடன் கூடிய பதிவு பக்கம் தோன்றும். அதில் பயனாளர்கள் தங்களுடைய மொபைல் எண், பெயர், மாற்று எண் உள்ளிட்டவைகளை பதிவிட வேண்டும்.
பிறகு அதில் உள்ள நெக்ஸ்ட் என்ற பட்டனை கிளிக் செய்தால், பிறந்த தேதி, பாலினம், பயனாளர்கள் வசிக்கும் இடம், பணிபுரியும் இடத்தின் முகவரி, மெயில் ஐடி போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும். இந்த அடிப்படை தகவல்களை கொடுத்த பின்பு பயனாளர்களின் மொபைல் போனுக்கு ஓ.டி.பி., எண் வரும். அதை கொடுத்து பதிவு செய்தால், காவலன் உதவி செயலி தயாராகிவிடும்.
ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவரைப் பற்றிய தகவல்களை தெரிவிக்க, மூன்று நபர்களின் மொபைல் எண்களை பதிவிடும் வசதியும் இந்த செயலியில் உள்ளது.
இதனால் ஆபத்து காலத்தில், பயனாளர்கள் பற்றிய தகவல் யாருக்கு கிடைத்தால், அவர்களின் உதவி பயனாளிகளுக்கு உடனடியாக கிடைக்குமோ, அந்த நபர்களின் எண்ணை இதில் பதிவிட வேண்டும்.
ஆபத்து நேரத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் காவலன் உதவி என்ற பட்டனை தேர்வு செய்து, அழுத்தி விட்டால் ஜி.பி.எஸ்., இயங்க ஆரம்பித்து விடும். மேலும், பயனாளரின் மொபைல் போனில் இருக்கும் கேமரா தானாகவே இயங்கி, வீடியோ எடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி விடும்' என்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம் கூறுகையில், 'நடப்பு ஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடன் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து, அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு ஆண்டில், காவல் உதவி செயலி வாயிலாக பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட சுமார், 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். போலீஸ் அவசர உதவி எண். 100 வாயிலாகவும் வரும் புகார்களை பெற்று, உடனடி நடவடிக்கை எடுக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்' என்றார்.