/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்னையில் 'மஞ்சள் வாடல்' உதவிட அரசுக்கு வேண்டுகோள் தென்னையில் 'மஞ்சள் வாடல்' உதவிட அரசுக்கு வேண்டுகோள்
தென்னையில் 'மஞ்சள் வாடல்' உதவிட அரசுக்கு வேண்டுகோள்
தென்னையில் 'மஞ்சள் வாடல்' உதவிட அரசுக்கு வேண்டுகோள்
தென்னையில் 'மஞ்சள் வாடல்' உதவிட அரசுக்கு வேண்டுகோள்
ADDED : ஜூன் 25, 2025 10:58 PM
கோவை; பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை தாலுகாக்களில் உள்ள தென்னை மரங்களில் மஞ்சள் வாடல் நோய் ஏற்பட்டு, ஏராளமான தென்னை மரங்கள் அழிகின்றன. இதை போர்க்கால அடிப்படையில் தடுக்காவிட்டால், தென்னை மரங்கள் முழுவதும் அழிந்து போகும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதிகளில் உள்ள , தென்னை மரங்களில் வெள்ளை ஈயால் ஏற்படும், மஞ்சள் வாடல் நோய் விவசாயிகளை பாடாய்படுத்தி வருகிறது.
தென்னை மரங்களின் வேர் வாயிலாக, நுழையும் நோய் கிருமிகள், மரம் முழுவதும் பரவுகின்றன. இதனால் ஓலை, கீற்று, குருத்து, காய் என்று அனைத்துமே மஞ்சள் படர்ந்து காணப்படுகிறது.
இதற்கு மருந்து தெளித்து, கட்டுக்குள் கொண்டு வராததால், பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், பட்டுப்போய் சாய்ந்து விட்டன.
1972ம் ஆண்டு பருத்தியில், 'ப்ரூட்டானியா புழு' தாக்குதல் ஏற்பட்டு பேராபத்தை சந்தித்தபோது விவசாயிகள் குரலுக்கு செவிமடுத்த அரசு, ஹெலிகாப்டர் வாயிலாக ஒருங்கிணைந்த முறையில் பருத்தி பயிரிட்டுள்ள பகுதிகள் முழுவதும் மருந்து தெளித்து, புழு தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அது போன்று இப்போது தென்னைக்கும், ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள், பழனிச்சாமி, பெரியசாமி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.