/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கைஆபத்தான மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ஆபத்தான மின்கம்பம் மாற்றியமைக்க கோரிக்கை
ADDED : ஜன 05, 2024 11:23 PM

வால்பாறை;வால்பாறையில், ஆபத்தான மின் கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது கலைஞர் நகர். இங்கு, 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள நடைபாதையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றியமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மின் கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்,' என்றனர்.