/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கண்ணம்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை கண்ணம்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கண்ணம்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கண்ணம்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
கண்ணம்பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 10, 2025 09:45 PM
சூலுார்; ''ரங்கநாத புரம் பிரிவு - கண்ணம் பாளையம் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,'' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்டது ரங்கநாத புரம். திருச்சி ரோட்டில் ரங்கநாத புரம் பிரிவில் இருந்து துவங்கும் கண்ணம்பாளையம் ரோட்டில், தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், கார்கள், வேன்கள் சென்று வருகின்றன.
ரோட்டை ஒட்டி வணிக வளாகங்கள் கடைகள் உள்ளன. ரோட்டையும், சாக்கடை கால்வாயையும் ஆக்கிரமித்து சிலர் கட்டடங்களை கட்டி உள்ளதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கண்ணம்பாளையம், பீடம் பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அதனால், தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் இந்த ரோட்டில் இயக்கப்படுகின்றன.
ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், நடந்து செல்வோர், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஒதுங்க கூட முடியாத நிலை உள்ளது.
சாக்கடை கால்வாய் கட்டும் இடத்திலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், அப்பணியும் அரைகுறையாக நடக்கிறது. இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக அகற்றி, கால்வாய் கட்டும் பணியை செய்ய வேண்டும்.
அதேபோல், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.