/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழாபள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா
பள்ளி, கல்லுாரிகளில் குடியரசு தின விழா

சங்கரா கல்வி நிறுவனங்கள்
சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் ராம் ராமச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினார்.
அங்கப்பா கல்லுாரி
அங்கப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, 'புது விடியல்' எனும் இதழ் வெளியிடப்பட்டது.கல்லுாரியின் நிறுவனத்தலைவர் அங்கப்பன் இதழை வெளியிட்டார். கல்லுாரியின் செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் மகேஷ்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாரதியார் பல்கலை
துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர் தேசிய கொடியேற்றி, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து, நாட்டின் ஒருமைப்பாடு, அமைதி, வளர்ச்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. விழாவில், பதிவாளர் முருகவேல், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளி
ஆதித்யா வித்யாஷ்ரம் குருகிராம் பள்ளியில், பள்ளி முதல்வர் தேசியக் கொடியை ஏற்றினார். மாணவர்கள், தேசத்தலைவர்களை போலவேடமணிந்து, சிந்தையைத் துாண்டும் உரைநிகழ்த்தினர். நாட்டின் சுதந்திர போராட்ட வரலாறு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி
பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், நாட்டின் 75-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி
நவ இந்தியா, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், கொடியேற்றத்துக்குப் பின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கல்லுாரி மாணவிகள் சிலர், முகத்தில் மூவர்ண கொடி வரைந்திருந்தனர். நாட்டின் ஒருமைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், மூன்று மத அடையாளங்களையும் இணைத்து, தேசிய கொடி வரைந்தது, பார்வையாளர்களின் கவனத்தை பெற்றது.
வேளாண் பல்கலை
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், துணைவேந்தர் கீதாலட்சுமி தேசிய கொடியேற்றி, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் அவர் பேசுகையில்,'' கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகளுக்கு, பல்கலையின் கண்டுபிடிப்புகளை, ஒரு விவசாயி ஒரு மாணவர் திட்டம் மூலம், விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. பல்கலை சார்பில், 24 பயிர் ரகங்கள், 10 தொழில்நுட்பங்கள் மற்றும் 9 வேளாண் தொழில்நுட்ப கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
அவினாசிலிங்கம் பல்கலை
அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் மீனாட்சிசுந்தரம், தேசிய கொடியேற்றினார். சிறப்பு விருந்தினர், வழக்கறிஞர் நாகசுப்ரமணியம் பேசுகையில், ''இந்திய நாட்டின் பெருமையை, உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு இளைய தலைமுறையினர் கையில் தான் உள்ளது. நாட்டின் வளர்ச்சி, மாணவர்களின் சிந்தனைகளால் தான் வடிவமைக்கப்படுகிறது,'' என்றார்.