/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; புரிந்துணர்வு ஒப்பந்தம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஜன 01, 2024 12:25 AM

கோவை:ஸ்டார்ட்அப் தமிழ்நாடு சார்பில், காலநிலைசார் தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தனர்.
இதில், ஏஐசி ரைசின் துணைத் தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்து பேசினார்.
தொடர்ந்து, ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டார்ட்அப் தமிழ்நாடுமிஷன் இயக்குனர் சிவராஜா ராமநாதன் மற்றும் ஏஐசி ரைசின் துணைத் தலைவர் நாகராஜ் பாலகிருஷ்ணன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
சின்க்ரோன் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்ஸ்ரீராம் சங்கரன்,பயோபியிள்தலைமை நிர்வாக அதிகாரி கிஷன் கருணாகரன் மற்றும் சர்க்கிள் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு வரதன் ஆகியோர், கலந்து கொண்டனர்.