/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் ஓடிப்போகும்' 'லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் ஓடிப்போகும்'
'லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் ஓடிப்போகும்'
'லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் ஓடிப்போகும்'
'லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் ஓடிப்போகும்'
ADDED : செப் 07, 2025 11:00 PM

கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. 300க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
காமாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் ரமேஷ் நடராஜன் கூறியதாவது: மாதம் தோறும் இங்கு , ஸ்ரீலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது ஸ்ரீலலிதாம்பாளின் ஆயிரம் பெயர்களை உச்சரித்து, பிரார்த்தனை செய்யும் நிகழ்ச்சியாகும். இந்த சஹஸ்ரநாமம் பாராயணத்தின் தொடர்ந்து செய்யும் போது, ஆத்ம திருப்தி ஏற்படும்.
எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நேர்மறை எண்ணங்கள் தோன்றும். சிந்தனையும், செயலும் சிறப்பாக இருக்கும்.
எந்த வகை நோய் வந்தாலும், இந்த ஸ்லோகத்தை சொன்னால் நோய் தீரும்.
மரண பயம் இருக்காது. வாழ்க்கையை நெறிப்படுத்த லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது. எல்லோரும் இதில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.