/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை' ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'
ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'
ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'
ரோட்டில் உள்ள பள்ளங்களை மூட வந்தாச்சு 'ரெடிமிக்ஸ் தார் கலவை'
ADDED : மே 29, 2025 12:25 AM

கோவை : கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோவையில் உள்ள பிரதான ரோடுகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன.
அதில், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில், 'ரெடிமிக்ஸ் தார் கலவை' பயன்படுத்தி, சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
உக்கடத்தில் இருந்து செல்வபுரம் பைபாஸ் ரோடு, சிறுவாணி ரோடு, காளப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குழிகள் மூடப்படுகின்றன. சிமென்ட் மூட்டை போல், ரெடிமிக்ஸ் தார் கலவை மூட்டை வந்திருக்கிறது. அதை குழிக்குள் கொட்டி சமன்படுத்துகின்றனர். 10 நிமிடத்தில் மூடப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'ரெடிமிக்ஸ் தார் கலவை, மூட்டை வடிவில் வருகிறது. 2,000 மூட்டைகள் இருப்பு வைத்திருக்கிறோம். மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோட்டில் உள்ள குழிகளை மூடுவதற்கு, ரெடிமிக்ஸ் தார் கலவையை பயன்படுத்துகிறோம்' என்றனர்.


