ADDED : ஜன 05, 2024 01:14 AM
போத்தனுார்:மதுக்கரையை அடுத்து வேலந்தாவளம் செல்லும் வழியில், அப்பாச்சிகவுண்டனுார் அருகே, பொள்ளாச்சி குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 425 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுாக்கு கடத்தி செல்வது தெரிந்தது.
அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஒட்டி வந்த மதுக்கரையை சேர்ந்த சிவமுருகேசன், 50 என்பவரை கைது செய்தனர்.