/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுயவிபரம் பதியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம் சுயவிபரம் பதியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்
சுயவிபரம் பதியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்
சுயவிபரம் பதியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்
சுயவிபரம் பதியாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்
ADDED : மார் 18, 2025 04:25 AM
கோவை : ரேஷன் கார்டுதாரர்கள் வரும், 31ம் தேதிக்குள் தங்கள் சுயவிபரம் (இகேஒய்சி) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்களுக்கு, அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், தங்கள் விபரங்களை ரேஷன் கடைகளில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும், இந்த பணியை, மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இதுவரை 84 சதவீதம் கார்டுதாரர்கள் இகேஒய்சி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாதவர்கள் விரைவாக பதிவு செய்ய வசதியாக, வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ரேஷன்கடை ஊழியர்கள், வீடு வீடாக சென்று, விபரம் பதிவு பணியை செய்து வருகின்றனர்.
வரும் 31ம் தேதிக்குள் இகேஒய்சி பதிவு செய்யாத கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படுகிறது' என்றார்.