ADDED : செப் 10, 2025 10:18 PM
கோவை; கோவை மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தில், வயது முதிர்ந்தவர் களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், இல்லத்துக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டம், 13, 14, 15ம் தேதிகளில் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட கூட்டுறவு துறையின் கீ ழ், இத்திட்டத்தில், 85 ஆயிரத்து 436 பேர் பயன் பெறுகின்றனர். தகுதி வா ய்ந்த குடும்ப அட்டை தாரர்களுக்கு, குடிமைப் பொருட்கள் வினியோகிக்கும் நாள் மற்று ம் பகுதி கு றித்தவிவரம், அந்தந்த ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்யப்படும் என, கூட்டுறவு துறை இணை பதி வாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.