/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையின் 7வது மேயர் ஆக ரங்கநாயகி! பரபரப்புக்கு மத்தியில் பதவியேற்புகோவையின் 7வது மேயர் ஆக ரங்கநாயகி! பரபரப்புக்கு மத்தியில் பதவியேற்பு
கோவையின் 7வது மேயர் ஆக ரங்கநாயகி! பரபரப்புக்கு மத்தியில் பதவியேற்பு
கோவையின் 7வது மேயர் ஆக ரங்கநாயகி! பரபரப்புக்கு மத்தியில் பதவியேற்பு
கோவையின் 7வது மேயர் ஆக ரங்கநாயகி! பரபரப்புக்கு மத்தியில் பதவியேற்பு

போட்டி மனு இல்லை
மாநகராட்சி, 72வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் முன்மொழிந்தார். மேலும், 71வது வார்டு கவுன்சிலர் அழகு ஜெயபாலன் வழிமொழிந்தார். வேட்புமனுவை காலை, 10:50 மணிக்கு ரங்கநாயகி தாக்கல் செய்தார்.
செங்கோல் வழங்கிய நேரு
அவரிடம், மேயர் பதவிக்கான சான்றிதழை அமைச்சர்கள் வழங்கி, மேயர் இருக்கையில் அமர வைத்தார். மேயருக்கான செங்கோலை அமைச்சர் நேரு வழங்க,ரங்கநாயகி பெற்றுக் கொண்டார். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'
மாநகராட்சியின், 100 கவுன்சிலர்களில், நேற்று தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியின், 96 கவுன்சிலர்கள், 84வது வார்டு கவுன்சிலர் அலிமாபேகம் ஆகியோர் தேர்தலில் பங்கேற்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் பங்கேற்கவில்லை.
உடமைகளுக்கு தடை
தேர்தல் நடந்த விக்டோரியா அரங்கினுள் கவுன்சிலர்கள் மொபைல்போன், பேனா, கை கடிகாரம், பர்ஸ் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
மிகவும் பரபரப்பாக நடந்த மேயர் தேர்தலுக்காக, விக்டோரியா ஹாலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கவுன்சிலர்கள், அரங்கினுள் சென்ற அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.