ADDED : பிப் 06, 2024 12:31 AM
கோவை;ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில், நுாறு கோடி ராமநாம லிகித ஜெப விழா, கோவை சாய்பாபா கோவில் வளாகத்தில் (ஸ்ரீ நாகசாயி மந்திர்) நடந்தது.
ஏராளமானோர் பங்கேற்றனர். ஒரு புத்தகத்தில் 20,000 முறை ராமநாமம் எழுதும் வகையில், தயார் செய்யப்பட்டிருந்தது.
நேற்று முன் தினம் மட்டும், 57 கோடி ராமநாம லிகித ஜெபம் எழுதி, சாய்பாபா கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், பங்கேற்று எழுதியவர்களுக்கு எண்ணிக்கை அடிப்படையில், ராமர்பட்டாபிஷேக விக்ரஹங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதற்கான பணியில், ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சாயி மாருதி சேவா அறக்கட்டளை, நீலகிரி மற்றும் ஸ்ரீ சாயி சாஷாத்காரம் அறக்கட்டளை ஆகியவை ஈடுபட்டன.