/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு மதுக்கரையில் வரவேற்பு ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு மதுக்கரையில் வரவேற்பு
ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு மதுக்கரையில் வரவேற்பு
ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு மதுக்கரையில் வரவேற்பு
ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு மதுக்கரையில் வரவேற்பு
ADDED : மே 18, 2025 12:25 AM

போத்தனூர் : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின், 34வது நினைவு தினம் வரும், 21ல் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி, ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரை, நேற்று முன்தினம் பெங்களூருவிலுள்ள கர்னாடகா பிரதேஷ் காங்., கமிட்டி அலுவலகத்திலிருந்து துவங்கியது.
நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சத்தியமங்கலம் வழியாக மதியம் கோவை, மதுக்கரையிலுள்ள ஐ.என்.டி.யூ.சி., அலுவலகத்தை வந்தடைந்தது. அங்கு தலைவர் துளசிதாஸ், மாநில பொது செயலாளர் புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து யாத்திரை, பாலக்காடு வழியாக திருச்சூர், ஆலுவா, கொச்சின் சென்றடைந்தது. இன்று கொச்சினிலிருந்து புறப்பட்டு கொல்லம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரியை சென்றடைகிறது. 20ல் மகாபலிபுரம் வழியாக சென்னை செல்கிறது. 21ல் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறது. அங்கு ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ஜோதி ஏற்றப்படுகிறது.
ஐ.என்.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் புவனேஸ்வரி கூறுகையில், அமைதி, நல்லிணக்கம் சகோதரத்துவம் வலியுறுத்தி, நூறு பேர் குழு யாத்திரை செல்கிறது,'' என்றார்.