ADDED : மே 22, 2025 11:53 PM

பொள்ளாச்சி : கோவை தெற்கு மாவட்ட காங்., சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.
தொடர்ந்து, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் துாவியும் மரியாதை செலுத்தப்பட்டது. அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதி மொழியேற்றனர்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, நகர வட்டார தலைவர்கள் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், பத்திரகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.