/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்வாயில் அடைப்பால் ரோட்டில் மழைநீர் தேக்கம் கால்வாயில் அடைப்பால் ரோட்டில் மழைநீர் தேக்கம்
கால்வாயில் அடைப்பால் ரோட்டில் மழைநீர் தேக்கம்
கால்வாயில் அடைப்பால் ரோட்டில் மழைநீர் தேக்கம்
கால்வாயில் அடைப்பால் ரோட்டில் மழைநீர் தேக்கம்
ADDED : மே 30, 2025 11:34 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, சர்வீஸ் ரோட்டில் கழிவு நீருடன், மழை நீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு வழியாக, அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டின் ஓரத்தில், அதிகளவில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளது.
இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள கால்வாய் வாயிலாக, அதிகளவு மழை நீர் சென்றது. தற்போது, இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவு நீருடன், மழை நீர் கலந்து ரோட்டில் தேங்கி உள்ளது.
இதனால், பாதசாரிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.