/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேக்கம்; கிராம இணைப்பு சாலையில் சிக்கல் சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேக்கம்; கிராம இணைப்பு சாலையில் சிக்கல்
சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேக்கம்; கிராம இணைப்பு சாலையில் சிக்கல்
சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேக்கம்; கிராம இணைப்பு சாலையில் சிக்கல்
சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேக்கம்; கிராம இணைப்பு சாலையில் சிக்கல்
ADDED : ஜூன் 25, 2025 09:29 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் ரோட்டில் உள்ள சுரங்கபாதையில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் செல்லும் ரோடு வழியாக, விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோட்டில், பொள்ளாச்சி - பாலக்காட்டுக்கு செல்லும் ரயில்வே வழித்தடத்தில், சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாலத்தின் மேற்பகுதி முழுவதும், 'ெஷட்' அமைத்து, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 2.5 கோடி ரூபாய்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பாலத்துக்குள் தண்ணீர் இருந்தாலும், அவை வெளியேற்ற, 'சம்ப்' அமைக்கப்பட்டது. தண்ணீர் தேங்கியதும், தானியங்கி முறையில் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்வதால், பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தில் இருந்து சிங்காநல்லுார் செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
கடந்த, மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால், மிகுந்த சிரமமாக உள்ளது. தானியங்கி முறையில் சம்ப் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.