ADDED : ஜூன் 20, 2025 11:42 PM
பொள்ளாச்சி : லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் 55வது பிறந்த நாள், கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மக்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் தமிழ்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, கவிதா, மாவட்ட துனண தலைவர்கள் மோகன்ராஜ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமரன்நகரில், அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு சிலேடு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. காங்., மனித உரிமை துறை மாவட்ட தலைவர் பஞ்சலிங்கம், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.