/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி; பேரூராட்சிகளில் பணி தீவிரம் தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி; பேரூராட்சிகளில் பணி தீவிரம்
தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி; பேரூராட்சிகளில் பணி தீவிரம்
தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி; பேரூராட்சிகளில் பணி தீவிரம்
தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி; பேரூராட்சிகளில் பணி தீவிரம்
ADDED : செப் 19, 2025 08:08 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு, கால்நடைத்துறையால் 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.
அவ்வகையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பிடித்து கருத்தடை செய்யப்பட்டன. இருப்பினும், நகர், சுற்றுப்பகுதி கிராமங்களில், ஒவ்வொரு தெருவிலும் 8 முதல் 10 நாய்கள் சுற்றி வருகின்றன.
இந்நிலையில், கால்நடைத்துறை வாயிலாக, ஒவ்வொரு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.மலையாண்டிபட்டிணம் பகுதியில் கால்நடை உதவி இயக்குனர் சக்ளாபாபு தலைமையில் டாக்டர் கவுதம் குழுவினர், இதற்கான பணியில் ஈடுபட்டனர்.
கால்நடைத்துறையினர் கூறியதாவது:
வெறிநாய் கடித்தாலோ, ஏற்கனவே உள்ள காயங்களில் நாய் எச்சில் பட்டாலோ 'ரேபிஸ் லைசா வைரஸ்' என்ற கிருமியால் 'ரேபிஸ்' நோய் ஏற்படுகிறது. எனவே, வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளுக்கு ஆண்டுதோறும் 'ரேபிஸ்' நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தற்போது, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், மூன்று வார்டுகளுக்கு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள தெருநாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி போடப்படுகிறது. நாய்களை பிடித்து தருவதற்காக, அந்தந்த பேரூராட்சி வாயிலாக பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நாய்கள் எங்கே பிடிக்கப்படுகிறதோ, அங்கேயே விட்டுச் செல்வதும் உறுதி செய்யப்படுகிறது. உரிமையாளர்கள் கோரினால் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.