/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்துார் அரசி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இந்துார் அரசி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இந்துார் அரசி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இந்துார் அரசி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இந்துார் அரசி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2025 09:17 AM

கோவை; மராட்டிய கூட்டமைப்பின்ஒரு பகுதியாக இருந்த, இந்துார் அரசின் மகாராணியாக இருந்தவர் அஹல்யாபாய் ஹோல்கர்.
இவரது 300வது பிறந்தநாள் விழா கடந்த மே 31ல் நாடு முழுக்க விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வரும் 5ம் தேதி வரை அவரது புகழ் பரப்பும் வகையில், நாடு முழுக்க கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று பா.ஜ.,அலுவலகத்தில், அஹல்யாபாய் ஹோல்கர் சாதனை விளக்க சொற்பொழிவு நடந்தது.
இதில் வேலுார் மாநகராட்சி முன்னாள் மேயரும், பா.ஜ.,மாநில பொதுசெயலாளருமான கார்த்தியாயினி பேசுகையில், ''இந்திய அரசியலை வழிநடத்திய, முக்கிய பெண்மணிகளில் இவரும் ஒருவர்.
அந்த காலகட்டத்தில், ஹோல்கர் வம்சம் உச்சமாக கருதப்பட்டது. அவர் பல இந்து கோவில்களை கட்டினார். வீரத்திற்கான மிகப்பெரிய அடையாளமாக திகழ்ந்தவர்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், பா.ஜ.,மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.