/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறு தானியத்தில் பொங்கல் வையுங்க! வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வுசிறு தானியத்தில் பொங்கல் வையுங்க! வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு
சிறு தானியத்தில் பொங்கல் வையுங்க! வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு
சிறு தானியத்தில் பொங்கல் வையுங்க! வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு
சிறு தானியத்தில் பொங்கல் வையுங்க! வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜன 12, 2024 10:41 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லுாரி மாணவர்கள், கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில், கொண்டம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி அலுவலகம் முன், வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் வாயிலாக சமூக வரைபடம் மற்றும் சிக்கல் பகுத்தாய்வு மரம் ஆகியவற்றை வரைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், சமூக வரைபடத்தில், ஊர் பகுதியில் உள்ள வங்கிகள், ஏ.டி.எம்., மற்றும் முக்கிய அலுவலகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிக்கல் கலந்தாய்வு வரைபடத்தில், மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் விவசாயிகளுக்கான பிரச்னைகள், பயிர்களில் ஏற்படும் நோய் தாக்குதல் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோன்று, சொலவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில், சிறு தானியத்தின் பயன்களை பள்ளி மாணவர்களிடம் தெரிவித்தனர்.
இதில், பண்டைய காலத்தில் உணவு முறைகளில் பெரும்பாலும் சிறு தானியம் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் சிறுதானியம் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. சிறு தானியத்தில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாட வேண்டும், என, மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.