Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயறு வகை விதை தொகுப்பு; வேளாண்துறை அறிவிப்பு

பயறு வகை விதை தொகுப்பு; வேளாண்துறை அறிவிப்பு

பயறு வகை விதை தொகுப்பு; வேளாண்துறை அறிவிப்பு

பயறு வகை விதை தொகுப்பு; வேளாண்துறை அறிவிப்பு

ADDED : ஜூலை 02, 2025 10:11 PM


Google News
பெ.நா.பாளையம்; பயறுவகை விதை தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என, வேளாண்துறை அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் நாளை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை காணொளி வாயிலாக துவக்க உள்ளார். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மரத்துவரை, காராமணி மற்றும் அவரை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும், தோட்டக்கலை துறை வாயிலாக காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், 3000 பேருக்கு பயறு வகை விதை தொகுப்பு அனைத்து வட்டாரங்களில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயறுவகை விதை தொகுப்பு இல்லங்களில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகளில் உழவர் செயலியில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது. பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதற்காக ஆதார் அல்லது குடும்ப அட்டை நகல்களுடன் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என, கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us